ஷெரிஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமான படமான காந்தி கண்ணாடி கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் வெளியாகின. இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, அமுதவாணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காந்தி கண்ணாடி படத்திற்கு திரையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை காமெடினாக இருந்த கேபிஒய் பாலா, இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த படத்தில் பாலாவுக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். காந்தி கண்ணாடி படத்தில் பாலா தனது நண்பர்களுடன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார். இந்த கதை காதல், நம்பிக்கை மற்றும் சவால்கள் நிரம்பிய 60வது திருமண விழாவை அடிப்படையாக கொண்டு நகர்கிறது.
இந்த படத்தின் விமர்சனங்கள் கலவையாக கிடைக்க பெற்றாலும், அதில் பாலாவின் காமெடி, திறமை மற்றும் கதையின் உணர்வுகளுக்கு அதிகமான பாராட்டுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், காந்தி கண்ணாடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 35 லட்சத்தை வசூலித்த நிலையில், இதன் இரண்டாவது நாள் வசூல் 45 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகரித்த காரணத்தினால் அடுத்த அடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
Listen News!