துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இந்த படத்தில் பிரேமலு பட நடிகர் நஸ்லன், சாண்டி மாஸ்டர், சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சுமார் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது. கல்யாணி சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடித்தது இதுவே முதல் தடவை ஆகும்.
கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த படம் 150 கோடியை எட்டியுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் 150 கோடியை எட்டிய படம் இதுதான் முதல் தடவை என்றும்,
இந்த படம் கதாநாயகி சப்ஜெக்ட்டில் வெளியாகி 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தும் என்றும் சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே லோகா படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான லோகா திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் இருந்து 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 365 காட்சிகள் மேலும் அதிகரித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!