அறிமுக இயக்குர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'தாவுத்'. இதில் நடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருப்பார். மேலும், சாரா ஆச்சர், திலீபன், ராதா ரவி, சாய் தீனா, வையாபுரி, சரத் ரவி, அஜய் அபிஷேக் ஆனந்த் நாக் என பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் ஆக்சன் என்டர்டெயினர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான இசையை ராகேஷ் அம்பிகாபதி வழங்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் 2025 செப்டம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதைக்களம் சினிமா வாசகர்களிடையே நுட்பமான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், 'தாவுத்' திரைப்படம் பற்றி சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சண்டை காட்சிகளே இல்லாமல் உருவாகி இருக்கும் வித்தியாசமான கேங்ஸ்டர் படமான தாவுத் படத்தில், ஒன்றல்ல மொத்தமாக ஆறு ஹீரோக்கள் இருக்கின்றார்களாம்.
ஒவ்வொரு ஹீரோவின் கோணத்திலும் இருந்து பார்த்தாலும் மொத்தமாக 6 ஹீரோக்களுக்கும் ஏற்ற வகையிலும் படம் புரியும் வகையிலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Listen News!