அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா இயக்கத்தில் சிந்தியா லூர்டே நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் தான் அனலி. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதன் போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிந்தியா லூர்டே தன்னுடைய அனுபவங்கள் பற்றியும், அனலி படத்தை பற்றியும், விஜய்யின் சினிமா பயணத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், அனலி திரைப்படம் என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாக நடித்துள்ளேன். இது வழக்கமான ஹீரோயின் கேரக்டர் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமா இருக்கும்.

90களில் விஜயசாந்தி மேடம் ஆக்சன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதல் முறையா ஒரு முழு நீள ஆக்சன் ஹீரோயினாக நான் நடித்திருக்கின்றேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்து இருக்கின்றேன். ரொம்ப கஷ்டப்பட்டு ஆக்சன் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. ஆனால் நிறைய வில்லன்கள் இருக்காங்க. இந்த படத்தில் மெயின் வில்லன் பி. வாசு மகன் சக்தி வாசுத்தான். இப்போ வரும் படங்களில் கதையே இருப்பதில்லை. ஆனால் இயக்குனர் சொன்ன கதை ஒரு நல்ல கதை. அந்த படத்தில் காட்சிகள் கடைசிவரை விறுவிறுப்பாக செல்லும்.
மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து நிச்சயமாக நடிப்பேன். என்னுடைய இயக்கத்தில் அவர் நடிப்பார். எனக்கு ஜோசியம் தெரியும். அவர் சினிமாவை விட்டு போய்விட்டார் என சொல்லுகின்றார்கள். ஆனால் நான் சொல்லுகின்றேன் நிச்சயமாக இரண்டு வருடத்திற்குள் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார். அதை நீங்கள் பார்ப்பீங்க என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!