• Apr 19 2026

கௌரி சீரியல் நடிகை திடீர் உயிரிழப்பு..! சக நடிகர்கள் சொன்ன திடுக்கிடும் காரணம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கன்னட தொலைக்காட்சியிலும்  தமிழில்  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகை நந்தினி.  இவருடைய நடிப்பு  நடிகைக்கு என்று நல்ல இடத்தை பெற்றுக் கொடுத்தது. 

கன்னடத்திலும் பிஸியாக நடித்து வரும் நந்தினி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வந்தார். இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.  அதில் கனகா, துர்கா என இரட்டை வேடத்தில் நடித்தார். 

இந்த நிலையில்,  கௌரி சீரியலில்  நடித்து வந்த நடிகை நந்தினி  நேற்று பெங்களூரில் தங்கி இருந்த அறையில் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துள்ளார். இவருடைய  மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையில் அதிகார்வபூர்வமாக வெளியாகவில்லை.  காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணையை நடத்தி வருகின்றனர். 


இவருடைய திடீர் மறைவு கன்னட மற்றும் தமிழ் நடிகர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  தற்போது  அவருடைய இறுதி அஞ்சலிக்காக பலரும் பெங்களூருக்கு விரைந்துள்ளனர். 

மேலும், சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் நந்தினி விஷம் குடித்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அதன் பின்பு தான் பெங்களூருக்குச் சென்று தனது உயிரை மாய்த்து உள்ளதாக சக நடிகர்கள் தெரிவித்து உள்ளனர்.  

Advertisement

Advertisement