• Apr 18 2026

நான் வில்லன் தான் ஆனால் கடைசி வரை இருப்பேன், கடும் குழப்பத்தில் இருக்கும் பூர்ணிமா- விஷ்ணு கொடுத்த அட்வைஸ்ட்-Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அதிரடியான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், பஸ்ரீர்ணிமாவும் விஷ்ணுவும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது விஷ்ணு ஒரு படத்தில் ஹீரோவை விட வெயிட்டான வில்லன் இருந்தால் தான் அந்தப் படம் ஹிட்டாகும் என்கின்றார்.

அத்தோடு நீங்க என்னை வில்லனாகக் கூடப் பார்த்துக்கோங்க, ஆனால் கடைசி வரைக்கும் நான் இங்க இருப்பேன் என்று சொல்ல பூர்ணிமாவும் நான் இதுவரைக்கும் நானாகாத் தான் இருக்கிறேன். யாரோடு சேர்ந்தும் கேம் ஆடல என்கின்றார்.

தொடர்ந்து டீ போடும் போது நானும் விஷ்ணுவும் பேசினதைப் பார்த்தா, விஷ்ணு வந்து என்னைக் கன்ரோல் பண்ணுராரு என்று சொல்லுவாங்க என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement