• Dec 26 2024

இவரு அடுத்த தளபதியா? நல்லா காமெடி பண்றீங்கன்னு... SK யை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக காணப்படுபவர் தான் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தாலும், வசூலில் சற்று பின்னடைவை  சந்தித்துள்ளது.

விஜய் டிவியில் சாதாரண காமெடியனாக உள்ளே நுழைந்து கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ஒரு இடத்தை  பிடித்துக் கொண்டவர் தான் சிவகார்த்திகேயன்.

இதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து அஜித்தின் ஏகன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அதற்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் காமெடி நடிகனாக களமிறங்கி,  ,அப்படியே எதிர்நீச்சல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மெரினா என ஹாலிவுட்டை  கலக்கி வந்தார்.


தற்போது ராஜ்கமல் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் எஸ்கே 21 படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் காரணமான எஸ்கே 21 படத்துக்காக சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து, தாறுமாறாக இருக்கும் சிவகார்த்திகேயனின் வீடியோவை நேற்று ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

அந்த வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என கொண்டாட தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தமது ஹீரோவின் பட்டம் யாருக்கும் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயனை வைத்து செம்மையாக கலாய்த்து தள்ளி உள்ளனர்.


அதாவது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என ரஜினி ரசிகர்கள் எப்படி பிரச்சனை செய்தார்களோ, அதுபோலவே தற்போது விஜயின் தளபதி பட்டத்திற்கு சிவ கார்த்திகேயன் ஏற்புடையவர் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இதேவேளை, பிரண்ட்ஸ் படம், மாவீரன் படம், அயலான் போன்ற படங்கள் வெளியாகி சொதப்பிடுச்சு. இதுல அடுத்த தளபதி இவரா? நல்லா காமெடி பண்றீங்கன்னு விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கலாய்த்து வர தற்போது இரு தரப்புகளுக்கும் இடையே சோசியல் மீடியாவில் சண்டை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement