• May 30 2026

CM விஜயின் மகனுக்கு ‘ரூட் கிளியர்’ ஆயிடுச்சா.? 'சிக்மா' ரிலீஸ் தேதி அறிவிப்பு வைரல்

Aathira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது தமிழக முதலமைச்சருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “சிக்மா”. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ராஜசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக தனது கட்சியை நிலைநாட்டி, அதன் மூலம் தமிழக ஆட்சியை பிடித்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் ஆட்சி அமைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னொரு பக்கம், அவருடைய மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்து, இயக்குனராக முயற்சியில் களமிறங்கினார். அவருடைய முயற்சிக்கு விஜய் எந்த சப்போர்ட்டும் செய்யவில்லை என்று பல தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு திடீரென லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் “சிக்மா” படத்தை சஞ்சய் இயக்குவார் என்று அறிவிப்பும் வெளியானது.


ஆனால் அந்த படத்திற்கு கதாநாயகன் யார் என்ற கேள்வி எழுந்தது. பலர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் சந்தீப் கிஷன் ஹீரோவாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” படம் ஜூலை 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது ஜேசன் சஞ்சய்க்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement