புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் அவரைப் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய பையனும் முளைச்சாவடைந்த நிலையில் காணப்படுகின்றார்.
ஏற்கனவே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 25 ஆயிரம் இழப்பீடு வழங்கி இருந்தார். எனினும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
d_i_a
இந்த வழக்கு தொடர்பில் நேற்றைய தினம் அல்லு அர்ஜுனிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு மேல் அதிகமாக அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும் தயாரிப்பாளர், இயக்குநர் சார்பில் தலா 50 லட்சம் ரூபாவும் மொத்தமாக 2 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. இந்த படம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களிலேயே 1500 கோடிகளை கடந்து பாக்ஸ் ஆபிஸில் நீங்கா இடம் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!