நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் கல்கி 28 98 ஏடி திரைப்படம், இன்றைய தினம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் கமல், அமிர்தாப், தீபிகா படுகோன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், தற்போது கல்கி 28 98 ஏடி படத்தின் திரைவிமர்சனம் பற்றி விரிவாக பார்ப்போம்.
அதன்படி இந்த படத்தில் ஆரம்பத்திலேயே மகாபாரதப் போர் நடந்து முடிகிறது. இதில் துரோணாச்சார்யா மகன்(அமிதாப் பச்சன்) பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்க, இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் 'உனக்கு மரணமே இல்லை, உடல் முழுவதும் ரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும் அப்போதுதான் உன் சாபம் தீரும்' என சொல்லுகிறார்.
இதைத்தொடர்ந்து 6000 வருடங்கள் ஓடி 800 வருடமாக உயிரோடு இருக்கும் யாஷ்கின்(கமல்) உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு ஊரை உருவாக்கி வைத்துள்ளார். அங்கு ஒரு வுண்டி ஹண்டராக பிரபாஸ் வருகின்றார்.
இவ்வாறு வந்த பிரபாஸ் ஒன் மில்லியன் யூனிட் இருந்தால் கமல் இருக்கும் காம்ப்ளஸ்க்குள் வரலாம் என்று ஒரு விதி. இதற்காக பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல் பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் எடுக்க முயற்சிக்கின்றார்.
இதன் போது அங்குள்ள தீபிகா படுகோன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் சீரோம் எடுக்கும் போது அது கிருஷ்ணன் தான் என்பது தெரிய வருகின்றது. இதனால் அமிர்தாப் பல வருட தவிப்பிற்கு பலனாக தீபிகாவை தேடி வருகின்றார். இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகின்றார்? அதோடு கமல் நினைத்தது அடைந்தாரா? என்றது தான் இந்த படத்தின் கதை கரு.
இந்த படத்தை பொருத்தவரையில் பலம் என்னவென்றால் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகள் தான். பிரபாஸ் நடித்த ஆதி பிரிருஷ் படத்தின் கிராபிக் காட்சிகள் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதிக பணச்செலவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரம் குறித்த பல கேள்விகள் இருந்ததன. அந்த கேள்விகளுக்கு எல்லாம் கல்கி படம் பதில் சொல்லும் படியாக அமைந்துள்ளது.
மேலும் இதிகாச கதையை சயின்ஸ் பிக்சன் வகையோடு இணைத்து நம்பகத் தன்மையான ஒரு கதையாக மாற்றி இருக்கின்றார்கள். ஹாலிவுட் படங்களான மேட்மேக்ஸ், டியூன், ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களின் சாயலை இந்த படத்தில் பார்க்க முடியும். ஆனாலும் அதிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் கேரக்டர்கள், இன்னொரு பக்கம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகள் கொண்ட கேரக்டங்கள் என அறிவியல் கற்பனையும் இணைத்து கல்கி படம் உருவாகியுள்ளது.
அத்துடன் பிரபாஸ் பயணிக்கும் புஜ்ஜி காருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். மேலும் மிருணாள் தாகூர், துல்கா சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமவுலி ஆகியோர் சின்ன சின்ன அம்சங்களில் சேர்ந்திருக்கின்றமையும் இதற்கு தனிச்சிறப்பாக காணப்படுகின்றது.
முதல் பாகத்தில் அமிதாபச்சனின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியும்படி காணப்படுகின்றது. எட்டு அடி உயரத்திற்கு கிரேக்க கடவுளை போல் இருக்கும் அவரது தோற்றம் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை அசத்தியுள்ளது.
பிரபாஸும் ஆக்சன் காட்சிகளில் அசர வைத்துள்ளார். ஆனால் அவரது கேரக்டர் கொஞ்சம் நகைச்சுவை தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. சில நேரங்களில் காமெடிகளின் டைமிங் மிஸ் ஆகின்றது. ஆனால் இவரது கேரக்டரில் மிகப்பெரிய டுவிஸ்ட் உள்ளது. இது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.
அத்துடன் ரெண்டே காட்சிகளில் தான் கமலஹாசனை காணலாம். அதில் கமலஹாசனின் கண்களை மிரட்டலாக காணப்படுகின்றது. கமலின் யாஸ்கின் கேரக்டர் முதன்மையாக இருக்கின்றது. இரண்டாம் பாகத்தில் கமலின் காட்சிகள் அதிரடியாக மிரள வைத்துள்ளது.
இந்த படத்தின் மொத்த உணர்ச்சியையும் தாங்கிச் செல்லக்கூடிய கேரக்டர் என்றால் அதை தீபிகா படுகோன் நடித்த சுமதி கேரக்டர். இதை தவிர ஷோபனா, பசுபதி, அனா பென் ஆகியவர்கள் தங்கள் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இறுதியாக இந்த படம் தொழில்நுட்பம் ரீதியாக பல பாராட்டுகளை பெற்றாலும், பொதுவாக ஹாலிவுட் படங்களின் கதை வடிவத்தையே இந்த படம் பின்பற்றி உள்ளது. எத்தனை விதமான நடிகர்கள் நடித்திருந்த போதும் இன்னும் நுணுக்கமான வழியில் இந்த பிரம்மாண்ட கதையை வழிநடத்தி இருக்கலாம். இந்த படத்தில் உள்ள கேரக்டர்களில் உணர்வு பூர்வமான தொடர்பு இல்லாதது இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. வசனங்களும் பெரும்பாலும் நேரடித் தன்மையுடன் காணப்படுகின்றது.
இந்த படத்தில் பெரும்பாலான நேரத்தை ஆக்சன் காட்சிகளை எடுத்துக் கொள்கின்றன. ஆக்சன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கேரக்டர்களின் உணர்ச்சியை பலப்படுத்துவதில் கொடுத்திருக்கலாம்.
Listen News!