• Nov 16 2026

மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வருகிறதா.? பவன் கல்யாண் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சருமான நடிகர் பவன் கல்யாண் தனது குடும்ப வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார்.

நடிப்பு மற்றும் அரசியல் என இரு துறைகளிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள பவன் கல்யாண், தற்போது அரசியல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இதன் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதையும் பெருமளவில் குறைத்துள்ளார்.

இந்நிலையில், பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான அண்ணா லெஷ்னேவா (Anna Lezhneva) தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அண்ணா லெஷ்னேவாவை பவன் கல்யாண் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சுமார் 13 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இருவரும் தற்போது தங்களது திருமண உறவை முடிவுக்குக் கொண்டுவர பரஸ்பரமாகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனினும், இந்த முடிவு தங்களுக்கிடையிலான மரியாதையையோ அன்பையோ பாதிக்காது எனத் தெரிவித்துள்ள அவர்கள், திருமண உறவு முடிவுக்கு வந்தாலும் நல்ல நண்பர்களாகவும், தங்களது குழந்தைகளுக்கு பொறுப்பான பெற்றோர்களாகவும் தொடர்ந்து இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு தற்போது தெலுங்கு திரையுலகிலும் பவன் கல்யாணின் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement