• Nov 16 2026

இன்றும் அவள் என் மகள் தான்.. சைந்தவி குறித்து ஜி.வி.பிரகாஷின் தாயார் வெளியிட்ட தகவல்

shali / 3 days ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தாயார், பாடகி சைந்தவி குறித்து மனம் திறந்து பகிர்ந்துகொண்டுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வரும் சைந்தவி, ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்திருந்தனர். இருப்பினும், சைந்தவி மீதான தனது அன்பும் பாசமும் இன்றளவும் மாறவில்லை என்பதை ஜி.வி.பிரகாஷின் தாயார் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், "இது மாமியார் - மருமகள் உறவைத் தாண்டிய பாசம். எப்போதும் என் மனதில் சைந்தவிக்கு ஒரு Special இடம் உண்டு. அருகில் இருந்தாலும் சரி, தொலைவில் இருந்தாலும் சரி, இன்றும் எனக்கு சைந்தவி மகள் தான்.

என்னுடைய நிகழ்ச்சி ஒன்றுக்காகப் பாடகியைத் தேடிக்கொண்டிருந்த போது, ஜி.வி.பிரகாஷ் தான் சைந்தவியைப் பாட வைக்கலாம் என்று கூறினார். அப்போது தான் நான் சைந்தவியை முதன்முதலில் பார்த்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுகள் மாறினாலும் உண்மையான அன்பும் பாசமும் ஒருபோதும் மாறாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தக் கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

Advertisement

Advertisement