• Nov 16 2026

தவறுகள் செய்தபோதும் கைவிடவில்லை.. ஜோதிகா குறித்து சூர்யா ஓபன்டாக்.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யா 47' திரைப்படம் 'சீன்' (Sean) என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் தனது மனைவி குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு தனக்குக் கிடையாது என்றும், ஆனால் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று தனது வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுத்து முன்னேறுவதற்குப் பின்னால் ஜோதிகாவின் வழிகாட்டுதலும் ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்துள்ளதாகவும், அவற்றைக் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் ஜோதிகா தனக்குப் பக்கபலமாக இருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அத்துடன், ஜோதிகா ஒரு சிறந்த தாய், தோழி மற்றும் வாழ்க்கைத் துணை எனப் புகழ்ந்த சூர்யா, அவர் வலிமையான நடிகை மட்டுமல்லாது சிறந்த மனவலிமை கொண்ட மனிதரும் கூட எனத் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் மனைவி தனக்குத் துணையாக நிற்பதாகக் குறிப்பிட்ட அவரது இந்தப் பேச்சு, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement