• Nov 16 2026

இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவில் மிரட்டும் மலையாள சினிமா.. தனுஷ் ஓபன்டாக்.!

shali / 5 hours ago

Advertisement

Listen News!

மலையாளத் திரையுலகின் தரமான திரைப்படப் படைப்புகளை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கேரளத்தில் நடைபெற்ற ‘ஓம்’ திரைப்பட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் தனுஷ், மலையாளத் திரைப்படங்களின் வளர்ச்சி மற்றும் அவை சர்வதேச அளவில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில், மலையாளத் திரையுலகம் எப்போதும் தரமான திரைப்படங்களுக்குப் பெயர் பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த திரைப்படங்களைத் தேடும்போது நாம் அனைவரும் மலையாள சினிமாவை நோக்கித் திரும்புவதாகவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது மலையாளத் திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில்கூட பல மலையாளத் திரைப்படங்கள் 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச அளவில் திரைப்படங்களின் வசூல் தரமும் புதிய உயரங்களை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் வளர்ச்சியை தனுஷ் இவ்வாறு வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement