• Nov 16 2026

திரையுலகில் மட்டுமல்ல தொழிலிலும் மாஸ் காட்டும் சமந்தா.. லீக்கான குட்நியூஸ் இதோ.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நடிப்பைத் தாண்டி தொழில்துறையிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். அந்த வகையில், அவர் இணை நிறுவனராகச் செயல்படும் Secret Alchemist நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட எட்டு மாதங்களிலேயே ரூ.120 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இருப்பினும், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று வருவதுடன், தனது கர்ப்பகால அனுபவங்கள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

சமந்தா நடிப்பைத் தாண்டி Saaki, Tralala Moving Pictures உள்ளிட்ட நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் தொழிலதிபராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த வரிசையில், அழகு மற்றும் நறுமணப் பொருட்கள் துறையில் தனித்துவமான முயற்சியாக Secret Alchemist நிறுவனத்தில் இணை நிறுவனராகச் செயல்பட்டு வருகிறார். அழகு மற்றும் நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் குறித்த விழிப்புணர்வின் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான நறுமணப் பொருட்களை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், நிறுவனம் தொடங்கிய எட்டு மாதங்களிலேயே ரூ.120 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவுக்கு அப்பாலும் சமந்தா பெற்றுள்ள இந்த வெற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


Advertisement

Advertisement