• Nov 16 2026

வெற்றிகள் எனக்கு எதையும் கற்றுத்தரவில்லை.. தோல்விகள் தான் வாழ்க்கையை மாற்றியது.! – சமந்தா

shali / 3 days ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் மற்றும் தொழில் முயற்சியில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து மனம் திறந்து தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அவர் தனது ஆரம்பகால தொழில் முயற்சி குறித்து பகிர்ந்துகொண்டபோது, முதன்முறையாக பார்ட்னர்ஷிப் முறையில் ஒரு தொழிலைத் தொடங்கியதாகவும், ஆனால் அந்த முயற்சி தான் எதிர்பார்த்தபடி அமையாமல் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்க்கையில் வெற்றி மட்டுமல்ல, தோல்வியும் மிக முக்கியமான அனுபவங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்பதை தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், சில நேரங்களில் வெற்றியை விட தோல்விதான் நமக்கு அதிகமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. எனது வாழ்க்கையில் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொண்டதை விட, தோல்விகளிலிருந்து தான் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறேன். உண்மையில், வெற்றிகள் எனக்குப் பெரிதாக எதையும் கற்றுத்தரவில்லை எனக் கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த வெளிப்படையான கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. குறிப்பாக, தொழில் முயற்சிகளில் தோல்வியைச் சந்திப்பவர்கள் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும் அவரது அனுபவம் வழங்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தாவின் இந்தக் கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement