• Dec 26 2024

துப்பாக்கி - அமரன் படத்திற்கு இடையில் இப்படியொரு ஒற்றுமை இருக்கா? மாஸ் அப்டேட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் இறுதியாக கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான கமெண்ட்ஸ்களை பெற்ற போதும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்பட்டது. இதன் வெற்றி கொண்டாட்டமும் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் 69 ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இந்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதோடு இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளனர்.

இளைய தளபதி விஜய் உச்ச நட்சத்திரமாக காணப்பட்ட போதும் இவற்றை எல்லாம் விட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார். தனது 69 வது படத்துடன் சினிமாவில் இருந்து முற்றாக விலக  உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அடுத்த தளபதி யார் என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்று அவருடைய ரசிகர்கள் குதுக்களித்து வந்தார்கள்.


இதனை நிரூபணம் ஆக்கும் வகையிலேயே கோட் படத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்து தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார் விஜய். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில், தற்போது விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது. அதேபோல தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படமும் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ளது.

இந்த இரண்டு கதைகளுமே நாட்டிற்காக உயிர்விட்ட வீரர்களின் கதை என்பதும், உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த படங்கள் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement