• Dec 26 2024

விடாமுயற்சி இயக்குநருக்கும் அஜித்திற்கும் இடையில் இப்படியொரு பிரச்சினையா?- இது தான் காரணமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மகிழ் திருமேனியுடன் அஜித்திற்கு சிறிதாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித்திற்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது இவர் தான்.


 இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் விடாமுயற்சி திரைப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக கமிட்டானார்.

ஆனால், படப்பிடிப்பு இடையிலேயே நீரவ் ஷா வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் புதிய ஒளிப்பதிவாளராக கமிட்டாகியுள்ளார்.

மகிழ் திருமேனிக்கும் நீரவ் ஷாவிற்கும் இடையே சரிவரவில்லை என்பதனால் தான் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித்துக்கு சற்று மனசங்கடம் ஏற்பட்டுள்ளதாம்.


மேலும் படப்பிடிப்பு இதுவரை 50 சதவீதம் தான் முடிவடைந்துள்ளதாம் பிப்ரவரி இறுதி வரை மட்டுமே அஜித்தின் கால்ஷீட் இருக்கும் நிலையில் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மகிழ் திருமேனி முடித்துள்ளார். இதனால் உடனடியாக தயாரிப்பாளருக்கு இதுகுறித்து பேசியுள்ளார் .

தயாரிப்பாளரிடம் பெப்ரவரிக்கு பிறகு கால்ஷீட் இல்லை, அதனால் அதற்குள் படத்தை முடிக்க சொல்லுங்கள் என கூறிவிட்டாராம். அஜித்திற்கும், மகிழ் திருமேனிக்கும் இடையே உரசல் வர இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement