• Dec 26 2024

செம மாஸாக வெளியாகிய தளபதி 68 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்- விஜய் வெளியிட்ட போட்டோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் இணைந்திருக்கும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து தற்பொழுது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகி  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது, ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்து இருந்தாலும், "தளபதி விஜய் The Greatest of All Time"  என்கின்ற அந்த தலைப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. 


மேலும் இன்று மாலை 6 மணிக்கு அந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சரியாக 6 மணிக்கு தளபதி விஜய் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். 

தந்தை மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் தளபதி விஜய் அவர்களுடைய இந்த திரைப்படம் ஒரு "பிரபலத்தை" பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா மற்றும் நடிகைகளான சினேகா மற்றும் லைலா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement