• Dec 27 2024

விஜயின் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு செயலா ?உடல் உறுப்பையே தானம் செய்துள்ளார்களா!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ரசிகர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல தீவிர ரசிகர்கள் பல விடயங்களை செய்கின்றனர். இவ்வாறு இருந்தாலும் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் செய்துள்ள செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் நாட்டின் தளபதி என அழைக்கப்படுபவர் விஜய் ஆவார். முன்னணி நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்திலும் நடித்து வருகின்றார்.  தற்போது   அரசியலிலும்  கால் பதித்துள்ள இவர் இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.


இந்த நிலையிலேயே நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னாக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த செல்வம், அவரது மனைவி சுசித்ரா மற்றும் குன்றத்தூர் த.வெ.க. நிர்வாகி எஸ்.கே.எஸ். நெப்போலியன் ஆகியோர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் .


Advertisement

Advertisement