• Dec 28 2024

எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது.. ஆனா 365 நாளும் போட்டோ வரணும்! அஜித்தின் பாலிசி இதுவா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் தல ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் எடுத்த ரிஸ்கை சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது படக்குழு. அதில் நடிகர் அஜித் கார் ரேசிங்கில் உண்மையாகவே தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது எடுத்துக்காட்டப்பட்டது.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் உண்மையாகவே ஒரு படத்திற்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கின்றார் அஜித் என புகழ்ந்து தள்ளி வந்தார்கள். குறித்த வீடியோவும் மிகவும் வைரலானது.


நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் வழமை போல அஜித்தை பங்கமாக கிண்டல் அடித்து பதிவு உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது. அதனால் தான் ஆடியோ லான்ச் அவார்ட் பங்க்ஷன் எல்லாம் போறது இல்ல. ஆனா வருஷத்துக்கு 365 போட்டோ மட்டும் சோசியல் மீடியாவில் வரவேண்டும் .

குறிப்பா விஜய் படத்தோட ட்ரைலர் வர்றப்ப, ஆடியோ லாஞ்ச், ரிலீஸ் தேதி, பர்த் டே டைம்ல.‌. என் ஃபோட்டோ வந்தாகனும். இன்னைக்கி என்ன போட்டு இருக்க? என  அஜித்தை கிண்டல் அடிக்கும் முகமாக அஜித்தின் கார் ரேஸ் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Advertisement