• Dec 26 2024

நம்ம விஜய் சேதுபதியா இது..? எவ்வளவு க்யூட்டா மாறிட்டாரு? அட்டகாசமான போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க எந்த மாதிரி கதாபாத்திரங்கள் வந்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுத்து வருகிறார். இவர்  தமிழையும் தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் .

கோலிவுட், பாலிவுட் என பிஸியாகவே இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி,  நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஜவான். அதில் வில்லன் கேட்டபில் நடித்து அசத்தியிருப்பார்.

அடுத்தடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ், விடுதலை 2, மகாராஜா படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 


இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் டைரக்ஷனில் அடுத்ததாக ட்ரெயின் படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதன் பர்ஸ்ட் லுக்கில் தாடி, மீசையுடன் மாஸ் காட்டியுள்ளார்.

குறித்த படத்தின் போஸ்டரில் ட்ரெயின் ட்ராக் உள்ளிட்டவை காட்டப்பட்டுள்ளன. இது ரசிகர்களுக்கு பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன், இந்தப் படம் மிஷ்கினின் 11வது படமாக  உருவாகவுள்ளது. 


அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு டிம்பிள் ஹயாதி ஜோடியாக நடிக்கவுள்ளார். ஒரு ராத்திரியில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டே கதையின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்தப்படத்திற்காக தனது பிட்னசை சிறப்பாக மாற்றியுள்ளார் விஜய் சேதுபதி. இதுவரை அதிக வெயிட்டாக காணப்பட்ட அவர், தற்போது க்யூட்டாக மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement