Sun TVயில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபல தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். சமூகப் பின்னணியையும், குடும்ப உறவுகளின் நுணுக்கங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர், தொடங்கிய நாள் முதல் டி.ஆர்.பி பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.
பல்வேறு திருப்பங்களுடன் நகரும் கதை, வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் திறமையான நடிகர்கள் ஆகியவை இந்த தொடரை ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பெறச் செய்துள்ளன.

இந்த தொடரில் “ஈஸ்வரி” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் கனிகா, தனது இயல்பான நடிப்பாலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், திடீரென அவர் இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “ஈஸ்வரி கதாபாத்திரம் இல்லாமல் கதை எப்படி நகரும்?”, “அவர் மீண்டும் வருவாரா?” போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டன. தொடரை தொடர்ந்து பார்ப்பவர்கள் பலரும் அவரது வெளியேற்றம் குறித்து அதிகாரபூர்வ விளக்கத்தினை எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் கனிகா தானே தனது விலகலுக்கான காரணத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “எனது மகன் தற்போது 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு அவருக்கு மிகவும் முக்கியமானது. அவரின் படிப்பை கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு அதிகம். அதனால் தான் சீரியலில் இருந்து விலக முடிவு செய்தேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. இயக்குநர் சாரிடம் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன். தயாரிப்பு நிறுவனத்திற்கும் சேனலுக்கும் இந்த விஷயம் தெரியும்.” என அவர் விளக்கமளித்துள்ளார்.
Listen News!