• Apr 24 2026

மீனாவை வெளியேற்ற விஜயாவின் மாஸ்டர் பிளான்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிரடி திருப்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக ‘சிறகடிக்க ஆசை’ தொடர் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. வாராவாரம் புதிய திருப்பங்களுடன் கதை நகர்வதால் இந்த சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில், அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை வெளிக்காட்டும் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் சம்பவங்கள் ரசிகர்களிடையே  ஆர்வத்தை  ஏற்படுத்தியுள்ளது. அதில் என்ன நடக்குது என விரிவாக பார்ப்போம்.

குறித்த ப்ரோமோவின் படி, முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் விஜயா ஒரு மாஸ்டர் பிளானை தீட்டுகிறார். அதற்காக அவர் ஒரு சாமியாரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

அந்த சாமியார் வீட்டிற்கு வந்ததும், 'இந்த வீட்டில் மீனா இருந்தால் நல்லது நடக்காது. அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால் மீனா வீட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்று கூறுகிறார்.


இதைக் கேட்டதும் வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்து உறைந்து போகின்றனர். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ள முக்கிய காட்சியாகும்.

ஏற்கனவே, மனோஜ்க்கு திருமணம் செய்து வைப்பதற்காக சிந்தாமணி கொடுத்த யோசனைப்படி, விஜயா இந்த திட்டத்தை செயல்படுத்தி முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முயற்சிக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஆனால் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, சிந்தாமணி தனது உண்மையான திட்டத்தை நிறைவேற்றுவார் என்றும், அதன் பின்னர் விஜயா தான் வீட்டை விட்டு வெளியேறி நடுத்தெருவுக்கு வர நேரிடும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர். 

Advertisement

Advertisement