• Dec 25 2024

ரொம்ப கஷ்ட்டமா இருக்கு! விஜய் சேதுபதிதான் காரணம்! விட்டுவிளாசிய ராணவின் அப்பா!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வையில் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் ராணவ். சமீபத்தில் பிக் பாஸ் டாஸ்க்கின் போது ஏற்பட்ட விபத்தினால் கையுடைந்த நிலையில் தற்போது ரெஸ்டில் இருக்கிறார். இந்நிலையில் இவரின் தந்தை " விஜய் சேதுபதி என் மகனை பேசவே விடுவது இல்லை, ஏன் அப்படி நடந்துக்கொள்கிறார் என்று புரியவில்லை" என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.  


பிக் பாஸ் போட்டியாளர் ராணவின் அப்பா சமீபத்திய பேட்டியில் " என் மகன்'ஹீரோவா நடித்து இருக்கிற படம் ரிலீசாக இருக்கிற நேரத்துல பிக்பாஸ் போறது நல்லதா'னு சிலர் கேட்டாங்க. 'உன் இஷ்டம் எதுவானாலும் செய்னு சொல்லிட்டேன். ஏன்னா, அவன் ஒரு முடிவு எடுத்தான்னா சரியாகத்தான் இருக்கும். அவன் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தது மட்டுமில்லாம, என்னையும் சில படத்துல நடிக்க வச்சி இருக்கான்" என்று கூறினார்.  


மேலும் "அவன் உள்ள போன பிறகு வீட்டுல எல்லாரும் ஆர்வமா பிக்பாஸ் பார்க்கலாம்னு நினைச்சதுதான் தப்பாப் போச்சு. ஏன்னா, அந்த வீட்டுக்குள் சில போட்டியாளர்கள் மூலமா அவன் படற கஷ்டங்களைப் பார்க்குறப்பபோ ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஆரோக்கியமான விளையாட்டா எடுத்துக்காம சிலர் வன்மத்தைக் கக்குறாங்க. சில நாள் அந்த நிகழ்ச்சியை டிவியில பார்க்குற என் மனைவி அழுதுட்டு டிவியை ஆஃப் பண்ணிடுறாங்க".


மேலும் பேசிய இவர் "ஒரு தொகுப்பாளரா விஜய் சேதுபதி தன்னுடைய  வேலையைச் சரியா செய்திருந்தா இப்ப என் மகனுக்கு கையில அடிபட்டிருக்காது, இந்த விபத்தே நடந்திருக்காது,ஜெப்ரியை அவர் சரியான நேரத்துக்கு கண்டிக்காம விட்டதுதான் இந்த விபத்துக்கு காரணம். அன்னைக்கு அடிபட்டிருக்குனு ஃபோன் பண்ணாங்க ஆனா தகவலை விபரமாக சொல்லவில்லை. அதனால என்னுடைய குடும்ப டாக்டரை பேச வச்சு விஷயத்தைக் கேட்டேன். அவர் பேசின பிறகுதான் எங்க வீட்டு அம்மாவுக்கு நிம்மதி" என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement