• Dec 26 2024

கோபியை அசிங்கப்படுத்தி பேசிய ஜெனியின் அப்பா, கதறி கதறி அழும் செழியன்- ஜெனிக்கு தெரிய வந்த உண்மை- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜெனி வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதால், ஈஸ்வரி வீட்டிற்குச் சென்று அதைக் கேட்டே ஆகவேண்டும் என்று கிளம்புகின்றார். தன்னுடன் கோபியையும் கூட்டிட்டு போக அழைக்க, பாக்கியா அங்க போய் பேசலாம் அத்தை ஆனால் சண்டை பிடிக்க வேணாம் சமாதானமாகப் பேசலாம் என்கின்றார்.


அதன்படி ராமமூர்த்தி, கோபி, ஈஸ்வரி, பாக்கியா எல்லோரும் ஜெனி வீட்டுக்குச் செல்கின்றனர். மறுபுறம் இனியா அமிர்தாவிடம் சொல்லி அழுகின்றார் இனிமேல் ஜெனி அக்கா வரமாட்டாங்களா, எதற்கு அவங்கள கஸ்டப்படுத்தினாய் என்று செழியனைத் திட்டித் திட்டி அழ அமிர்தா சமாதானப்படுத்துகின்றார்.

தொடர்ந்து அங்கு எழில் வர, அமிர்தா ஜெனி வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஷயத்தைச் சொல்ல எழில் செழியனை சமாதானப்படுத்துகின்றார். அப்படியெல்லாம் நடக்காது கவலைப்படாத என்கின்றார். பின்னர் ஜெனி வீட்டுக்கு வரும் ஈஸ்வரி ஜெனி பெற்றோரிடம் இப்படி செய்தது சரியா என்று கேட்கின்றனர்.


அப்போது உள்ளே இருந்து ஜெனி வர, ஈஸ்வரி எதற்காக விவாகரத்த நோட்டீஸ் அனுப்பினாய் என்று திட்ட, ஜெனி இதைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றார். அப்போது ஜெனி தனக்கு தெரியாமல் எப்படி நோட்டீஸ் அனுப்பினாங்க என்று யோசிச்சுக் கொண்டிருக்கின்றார்


அப்போது ஜெனியின் அப்பா கோபியிடம் உன்னை மாதிரி தானே உன் பிள்ளை இருப்பான் ஒரு காலத்தில நீ பண்ணினதை தான் அவன் பண்ணி இருக்கிறான். என் புள்ளை எங்க கூட தான் இருப்பாள் இனி வரமாட்டாள் என்று சொல்ல ஈஸ்வரி, நீங்க உங்கட பிள்ளையை மட்டும் பார்க்கிறீங்க அவளுக்கு என்று ஒரு குழந்தை இருக்கு, அது யார் கூட இருக்கனும் என்று இன்னும் முடிவெடுக்கல அதை மறந்திடாதீங்க என்று சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement