• Dec 26 2024

மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு 500 கோடியை வழங்கினேனா?- விளக்கம் கொடுத்த நடிகர் பிரபு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வலம் வருபவர் தான் பிரபு. கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இவருடைய மகனான விக்ரம் பிரபுவும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவரது மகளான ஐஸ்வர்யா,தன்னுடைய அத்தை மகனான குணாலை முதலில் திருமணம் செய்திருந்தார். பின்னர் இரு குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு  சென்னையில் உள்ள தன்னுடைய அப்பா - அம்மாவுடன் வசித்து வந்தார். மேலும் பேக்கரி ஒன்றையும் வைத்து நிர்வாகம் செய்து வருகிறார்.


இந்நிலையில் அண்மையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக ரஜினி, கமல், அஜித்தின் மனைவி ஷாலினி, விஜய் சேதுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த திருமணத்திற்கு வருகை தந்தனர்.

பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது . அதில் மிகவும் முக்கியமானது நடிகர் பிரபு தரப்பில் இருந்து மகளின் இரண்டாவது திருமணத்திற்கு 500 கோடி வரதட்சனை கொடுத்திருக்கலாம் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருந்தார்.


தற்போது இது குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில், இது பற்றி பிரபு கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த 500 கோடி வரதட்சிணை தகவலை அறிந்த பிரபு, "ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருக்கிறது.இதுல இது வேறயா... நான் 500 கோடியை, பத்திர பதிவு செய்து கொடுத்தது போல் பேசுகிறார்கள் எல்லோரும் . ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement