• Dec 27 2024

சர்வதேச அளவில் 1000ம் கோடியை தாண்டிய கல்கி.. தாறுமாறாக வெற்றியை கொண்டாடும் படக்குழு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பிரபாஸோடு கமலஹாசன், அமிதா பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்த படம் தான் கல்கி 28 98 ஏடி திரைப்படம். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் அமிதாப்பச்சனின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


உலகநாயகன் கமலஹாசனும் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். சில நிமிடங்களே  படத்தில் அவரது கேரக்டர் காட்டப்பட்ட போதும், அவருடைய கேரக்டர் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கல்கி 28 98 ஏடி திரைப்படம் வெளியாகி சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடி ரூபாயை வசூலில் தாண்டி உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தற்போது அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், தற்போது ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement