• Dec 28 2024

ஆள் அடையாளமே தெரியாமல் மாஸ் ஹீரோவாக மாறிய சூரி! USA இல் ஜொலிக்கும் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் தனக்கேற்ற சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்ற வகையில் தன்னை தயார்படுத்தி இன்று ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சூரி.

இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானார். அதற்கு பிறகு பிரபல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருந்தார்.

இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் நாயகனாக தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய இவருக்கு, அதில் கிடைத்த வெற்றியினால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.


அதன்பின்பு தற்போது நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக வெளியான கருடன் திரைப்படம் அவரது புகழை இன்னும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. வசூலிலும் இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி USA இலிருந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ஹீரோவுக்கே டாப் கொடுப்பீங்க போல அவ்வளவு க்யூட்டா இருக்கீங்க எனக் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

நடிகர் சூரியின் இந்த அசுர வளர்ச்சி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதோடு, காமெடியன் என்றாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement