• Dec 26 2024

காலை மேலே தூக்கி உடற்பயிற்சி.. சமந்தாவின் வேற லெவல் இன்ஸ்டா போஸ்ட்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தனது உடல் எடை மற்றும் உடல் தகுதி குறிப்புகளுடன் கூடிய  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டி என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், திரையுலகில் இருந்து விலகி முழுவதுமாக சிகிச்சை பெற்றார். தற்போது அவர் அந்த நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரிந்தது.

அதுமட்டுமின்றி உடல்நலம் குறித்த பாட்காஸ்ட் ஒன்றை சமந்தா ஆரம்பித்துள்ளார் என்பதும் அதில் அவர் தனது சிகிச்சை அனுபவங்கள் மற்றும் பொதுவான உடல் தகுதி பெற தேவையான குறிப்புகளையும் பதிவு செய்து வருகிறார்.



இந்த நிலையில் சற்றுமுன் சமந்தா அழகிய கடல் பின்னணியில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஒரு காலை மேலே தூக்கி கொடுத்துள்ள போஸ் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் தனது உடல் எடை 50 கிலோ என்றும் அதன் பின்னர் தனது உடல் சம்பந்தமான குறிப்புகளையும் பதிவு செய்துள்ளார்.

இந்த குறிப்புகளை பார்த்த ரசிகர்கள் சமந்தா தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறியதோடு அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement