தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ரொமாண்டிக்-ஆக்ஷன் திரைப்படம் “பையா”. நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா ஜோடியாக நடித்த இந்தப் படம், திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பைப் பெற்றது. 2010 ஆம் ஆண்டில் வெளியான இப்படம், அதன் பாடல்கள், காட்சி அமைப்புகள் மற்றும் காதல் கலந்த ஆக்ஷன் என்பவற்றால் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றி பின்னணியில், இப்படம் தெலுங்கில் "அவரா" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு வெளியானது. அதுவும் பெரும் ஹிட்டாகியிருந்தது. தற்போது, இந்த தெலுங்கு பதிப்பு மீண்டும் ரீ-ரிலீஸாகி திரைக்கு வரவிருக்கிறது என்பதுதான் ரசிகர்களை தீவிர எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள செய்தி.
லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம், மக்கள் மனதில் எப்போதும் புதுமையாகவே இருக்கும் காதல்-சண்டை கலந்த சினிமாகாக இருந்தது. அந்தவகையில், கார்த்தி – தமன்னா ஜோடி தெலுங்கு ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்ட ஜோடியாக மாறியது. அதிலும் யுவனின் இசை தெலுங்கிலும் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருந்தது.
சமீபத்தில் தெலுங்கில் “ரீ-ரிலீஸ் கலாசாரம்” மிகவும் பிரபலமாகி வருகிறது. பழைய ஹிட் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டு ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவது ஒரு புதுமையான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில் தான் “ அவரா” படமும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. இந்த ரீ-ரிலீஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடத்தப்படவுள்ளது எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Listen News!