நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் தொடங்கியுள்ள ‘மக்கள் மேடை’ இயக்கம் குறித்து அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்த இயக்கம் அரசியல் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் லதா ரஜினிகாந்த் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “எனக்கு அரசியல் பதவிகள் மீது எந்தவித விருப்பமோ ஆசையோ இல்லை. அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் உருவாக்கப்படவில்லை. அரசியலை விட சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் என் கனவு. சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் முதலில் மக்களுக்கு உதவும் தகுதியையும் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்” என்றார்.
மேலும், “நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வதே எங்களின் தற்போதைய இலக்கு. ‘மக்கள் மேடை’ எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை எதிர்கால தலைமுறையினரே தீர்மானிக்கட்டும். நான் ஒரு தலைவராக அல்ல, வழிகாட்டியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
லதா ரஜினிகாந்தின் இந்த கருத்துகள், ‘மக்கள் மேடை’ அரசியல் கட்சியாக மாறுமா என்ற விவாதங்கள் மத்தியில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!