பிரமாண்ட படங்களின் இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷங்கர், தனது அடுத்த படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் பிரமாண்ட படங்களுக்கு பெயர் பெற்ற அவர், தற்போது வேகமான கதைக்களத்துடன் கூடிய ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படம், அவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் "வேள்பாரி" போன்ற வரலாற்று மற்றும் பிரமாண்ட திரைப்படத்திற்கு முன்பாக உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக பல மாதங்கள் நீளும் ஷங்கரின் படப்பிடிப்புகளுக்கு மாறாக, இந்த திரைப்படம் வெறும் 70 நாட்களில் முழுமையாக படமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக, இந்த படத்தில் முன்னணி பெரிய நட்சத்திரங்கள் இடம்பெறாமல், தற்போது வளர்ந்து வரும் இளம் மற்றும் திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் புதிய முகங்களையும், புதிய கதையம்சத்தையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி காட்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகவுள்ள இந்த படம், ரசிகர்களை திரையரங்குகளில் சீட்டின் நுனிக்கே வரவழைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிப்பதால், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Listen News!