• Apr 23 2026

லைக்குகள் முக்கியமில்லை.. ரசிகர்களின் மனதை வெல்வதே உண்மையான வெற்றி.! – ஷ்ரேயா கோஷல்

shali / 1 month ago

Advertisement

Listen News!

இன்றைய சமூக வலைத்தள உலகில் ஒரு பாடல் வெளியானதும் அது எத்தனை லைக்குகள் பெற்றது, எத்தனை மில்லியன் வியூஸ் அடைந்தது என்பது பேசுபொருளாகிறது. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷ்ரேயா கோஷல், “ஒரு பாடலின் உண்மையான வெற்றி லைக்குகள் கிடையாது. ரசிகர்களின் மனநிலையை வெல்வது தான்,” என்று கூறியுள்ளார். 


அவர் மேலும், “கச்சேரியில் நான் ஒரு பாடலைப் பாடும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து அந்தப் பாடலை முழு மனதுடன் பாடும் தருணம் தான் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி,” என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து, கலை மற்றும் வணிக வெற்றியின் வித்தியாசத்தை சுட்டிக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது. அவரது பேச்சு, இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது மனித உணர்வுகளுடன் நேரடியாக இணையும் சக்தி என்பதை வலியுறுத்துகிறது.

Advertisement

Advertisement