மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சந்தோஷ் ட்ராஃபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
‘சந்தோஷ் ட்ராஃபி’ திரைப்படத்தை விபின் தாஸ் இயக்குகிறார். இவர் முன்பு இயக்கிய "குருவாயூர் அம்பல நடையில்" திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வெற்றிக்கு பிறகு, விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படம் குறித்து ரசிகர்களிடையே அதிக ஆர்வம் நிலவுகிறது. அவரின் கதை சொல்லும் முறை மற்றும் நகைச்சுவை கலந்த சமூக உணர்வுகள் இந்த படத்திலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!