தென்னிந்தியாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் பெரும்பாலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வருகின்றன. இளைஞர்களை கட்டிப் போடும் அளவிற்கு இவருடைய இசை எப்போதும் பிரம்மாண்டமாக காணப்படுகிறது.
இவருடைய இசையில் சமீபத்தில் வெளியான “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் கதை ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அந்த படத்தை முழுமையாக தூக்கி நிறுத்தியது அனிருத்தின் இசை என பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தற்போது காதல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் உடன் அவர் காதலில் இருப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் உலா வந்தன. இப்போது, இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

மேலும், திருமண தேதியும் இரு குடும்பங்களால் பேசி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த திருமணம் ஸ்பெயினில் நடைபெறலாம் என்றும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Listen News!