• May 22 2026

மோகன்லாலுக்கே இந்த நிலையா.? 'த்ரிஷ்யம் 3' கலெக்சன் இதோ.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் மிக முக்கியமான திரில்லர் சீரிஸ்களில் ஒன்றாக பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜித்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால்  மீண்டும் ஜார்ஜ்குட்டியாக திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து வெளியாகியிருக்கும் இந்த மூன்றாவது பாகமும் அதே அளவிலான சஸ்பென்ஸ் மற்றும் எமோஷன்களுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்தப் படத்தில் மோகன் லாலுடன் மீனா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜார்ஜ்குட்டியின் புத்திசாலித்தனமான நகர்வுகள் மீண்டும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் திரைக்கதையின் ட்விஸ்ட்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆஃபிஸில் மாபெரும் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Sacnilk வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 18.37 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், வெளிநாடுகளில் 15 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் 43 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதால், மிக விரைவில் 100 கோடி கிளப்பில் படம் இணையலாம் என திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன.

Advertisement

Advertisement