• Apr 08 2025

இந்தியன் 3 படத்தைக் கைவிட்ட லைகா நிறுவனம்..! – ஷங்கர் இயக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து 1996ம் ஆண்டு வெளியிட்ட 'இந்தியன்' திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அதிகளவில் வெற்றி பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக 'இந்தியன் 2' படத்தின் வேலைகள் பல ஆண்டுகளாக நீடித்துவந்த நிலையில், படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வந்திருந்தது.

கமல்ஹாசன், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த 'இந்தியன் 2' படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. ஆனால், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. பெரும்பாலான விமர்சகர்கள் படம் முதல் பாகத்தைப் போல இல்லை என்றும் , சிலர் படத்தின் முக்கியமான அரசியல் கருத்துக்களைப் பாராட்டியும் உள்ளனர்.



'இந்தியன் 2' ரசிகர்களிடம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், இயக்குநர் ஷங்கர் இந்தியன் 3 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், 'இந்தியன் 3' குறித்து பெரிய சர்ச்சைத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படம் முழுமையாக முடிவடையவில்லை என்பதால், இயக்குநர் ஷங்கர் லைகா நிறுவனத்திடம் ஒரு முக்கிய பாடலை படமாக்கும் பணிக்காக அதிக பட்ஜெட் கேட்டிருந்தார். ஆனால், லைகா நிறுவனம் அதிக பட்ஜெட்டை ஒதுக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்சனை காரணமாக, ஷங்கர் 'இந்தியன் 3' இயக்கத்தில் இருந்து விலகியிருக்கிறார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement