• Jan 08 2025

அன்பு காதலுக்கு ஆப்பு வைத்த மகேஷ்.. சென்னைக்கு கிளம்பி வரும் ஆனந்தியின் குடும்பம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியலில் இந்த வாரம் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்து மூன்று வாரங்களாக நந்தா கேரக்டரை வைத்து ஓட்டிக்கொண்டிருந்த நிலையில் தற்போது மகேஷை வைத்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

உண்மையான அழகன் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆனந்திக்கு ஏக்கம் காணப்படுகின்றது. அந்த நேரத்தில் அன்பு தானாக வந்து ஆனந்தியிடம் நான் தான் அழகன் என்று சொல்ல வேண்டாம் என நினைக்கின்றார்.

இதனால் அவர்களுடைய அப்பா அம்மாவை சென்னைக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக ஆனந்தியிடம் பேச திட்டமிட்டுள்ளார். அன்பு திட்டமிட்ட படியே ஆனந்தியின் குடும்பமும் அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு கிளம்பி வருகின்றார்கள்.


ஆனாலும் அன்புக்கு முன்னர் மகேஷ் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கின்றார். அதன்படி ஆனந்தியின் பிறந்தநாளில் அவரின் காதலை வெளிப்படுத்த மகேஷ் திட்டம் போட்டுள்ளார். இதற்காக அன்பு விடமே உதவியும் கேட்டுள்ளார் மகேஷ்.

அந்த நேரத்தில் ஆனந்தியின் அம்மா, அப்பாவையும் சென்னையில் வைத்து மகேஷ் தான் முதலில் சந்திப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை மகேஷ் மீது நல்லெண்ணம் ஏற்பட்டு ஆனந்தியின்  பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ள சொன்னால் அவரது முடிவு என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement

Advertisement