• Jan 07 2025

அடுத்த பரிமாணத்திற்கு தயார் மகாராஜா படத்திற்கான பேட்டியில் மக்கள் செல்வன்

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

உழைப்பே உயர்த்தும் என்ற தமிழ் சினிமாவில் பழமொழிக்கு நாம் உதாரணம் தேடின் அதில் முக்கிய நபராக நாம் அடையாளம் காட்ட கூடியவர் மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி.தற்போது தமிழ் சினிமா தாண்டி பிற  இந்திய மொழி திரைப்படங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.


தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார்.திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது.


அண்மையில் மகாராஜா படத்தின் ப்ரோமோஷேன் வேலைகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி அவரகள் "மகாராஜா எனக்கு 50வது படமாக அமைந்தது மகிழ்ச்சி அத்தோடு எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது. விரைவில் படம் டைரக்ட் செய்வேன் " என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement