• Dec 28 2024

இந்த வாரம் தியேட்டர்களை ஹவுஸ்ஃபுல்லாக்க ரிலீஸாகும் முக்கிய படங்கள்? ஓடிடி விபரம் இதோ,

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்த வாரம் தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நடிகர் சூரி ஹீரோவாக நடித்த படம் தான் கருடன். இந்தப் படத்தை துறை செந்தில் குமார் இயக்கி உள்ளார். மேலும் சூரி உடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி, பிரிகிடா என மிகப்பெரும் நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


இயக்குனர் விக்ரமின் மகன் கனிஷ்கா ஹீரோவாக அடி எடுத்து வைக்கும் திரைப்படம் தான் ஹிட்லிஸ்ட். இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் தயாரிக்க, சூர்யகதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கின்றார். இந்தப் படமும் மே 31-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


இதை தொடர்ந்து தலைவாசல் விஜய், நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷான்  ஆகிய நடித்த படம் தான் அக்காலி. இந்த படத்தை முகமது ஆசிஃப் ஹமீது இயக்கியுள்ளார். திரில்லர் படமாக உருவான இந்த படம் எதிர்வரும் மே  31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


ஜான்வி கபூர் கதையின் நாயகியாக நடித்த படம் தான் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி. இந்தப் படம் ஷரன் ஷர்மா இயக்கத்தில் உருவாக்கி உள்ளது. இதில் ஜான்வி கபூருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராம் நடித்துள்ளார். இந்தப் படமும் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஜான்விக் கபூர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவான படம் வெப் தொடர் தான் உப்பு புளி காரம். இதில் வனிதா, பொன்வண்ணன், அஸ்வினி, நவீன், ஆயிஷா, தீபிகா, தீபக் ரமேஷ் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படம் எதிர்வரும் 30 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

Advertisement

Advertisement