• Dec 27 2024

மனோஜுக்கு போடப்பட்ட குறும்படம்.. முகத்தில் கரியை பூசிக்கொண்ட ரோகிணி! வெளியான ப்ரோமோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் சிறந்த தம்பதி யார் என்பதற்கான போட்டி நடக்கின்றது. அதில் முத்துவும் மீனாவும் உண்மையாகவே பேசி போட்டியில் அசத்தி வருகின்றார்கள்.

தற்போது வெளியான ப்ரோமோவில் ஒரு கணவன் மனைவி திருப்திகரமான வாழ்க்கை வாழ என்ன வேண்டும் என நடுவர்கள் டாஸ்க் வைக்கின்றார்கள். அதன்படி ஒவ்வொருவரையும் தனித்தனியாக போய் பேசி விட்டு வருமாறு அனுப்பி வைக்கின்றார்கள்.


மீண்டும் அவர்கள் மேடையில் வந்த போது மனோஜ் தாம் தான் சிறந்த ஜோடி என நடுவர்களிடமே ஓவராக பேச, அவர்கள் குறும்படம் ஒன்றை போட்டு காட்டுகின்றார்கள் இதை பார்த்து மனோஜ் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்.

இறுதியாக மூன்று ஜோடிகளில் யார் சிறந்த ஜோடி என நடுவர்கள் கூறுவதற்கு முன்வந்து உள்ளார்கள் இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement