• Apr 30 2026

சூரி பாத்ரூம் போன சீனை பப்ளிசிட்டி பண்ணிய மிஷ்கின்! விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் சூரி. இவர் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து தனது கடின உழைப்பால் அசுர வேகத்தில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார்.

வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன் பின்பு கருடன் படத்தில் தனது அபரிதமான நடிப்பை மேலும் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அடுத்து என்ன படத்தில் நடிப்பார்? அதில் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காணப்படுகின்றார்கள்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படத்தின் ட்டெய்லர் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்த நிலையில்,  இன்றைய தினம் இடம்பெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசிய பேச்சு ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.


அதாவது, கொட்டுக்காளி படத்தில் நடிகர் சூரி சிறுநீர் கழிக்கும் காட்சி அப்படியே தத்துரூபமாக எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதன்போது வினோத்ராஜ் கேமராவை தூக்கிக்கொண்டு அவர் அருகே சென்று திடீரென கேமராவை டில்ட் டவுன் செய்து விடப் போகின்றாரோ என பயந்துவிட்டேன் என்றும், அவர் அப்படி காட்டி இருந்தால் கூட சந்தோஷப்பட்டு இருப்பேன் என மிஷ்கின் பேசியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement