• Dec 25 2024

மனோஜை பிச்சைக்காரன் என அசிங்கப்படுத்திய முத்து.. வித்யா கேட்ட கேள்வியில் ஆடிப்போன ரோகிணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து, ரவி, மனோஜ் ஆகியோரை வெளியிலேயே படுக்குமாறு வெளியே அனுப்பி கதவை சாத்தி விடுகிறார். மனோஜ் உள்ளே வந்து உடுப்பை மாத்தி விட்டு செல்லட்டுமே என்று ரோகிணி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அண்ணாமலை.

இதை தொடர்ந்து மூன்று பேரும் வெளியே இருக்க மனோஜ் தான் சாதித்து விட்டதாகவும் தன்னால்தான் அந்த பிசினஸ் கிடைத்ததாகவும் சொல்லிக் கொண்டிருக்கின்றார். உங்களால எல்லாம் முடியாது நீ ஒரு டிரைவர் தானே என்று முத்துவுக்கு சொல்ல, நீ கோயில்ல இருந்து பிச்சை எடுத்தவன் தானே என்று முத்து மனோஜின் பழைய கதையை சொல்லி ரவியுடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்.


அதன் பின்பு மனோஜ், ரவியும் ஒரு கட்டத்தில் தூங்கி விட முத்து  தூக்க வராமல் இருக்கின்றார். அதேபோல மீனாவும் தூங்கவில்லை. அதன் பின்பு முத்து கதவை தட்டி தண்ணீர் கேட்க, உள்ளே வரவேண்டாம் என்று மீனா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றார். பிறகு இருவரும் அப்படியே வாசலில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை அடுத்து ரோகினி மனோஜின் ஃபோனை எடுப்பதற்கு வெளியே வரும் போது மீனா, முத்து  பேசிக் கொண்டிருப்பதால் அதை எடுக்க முடியாமல் இருக்கின்றார். அந்த நேரத்தில் வித்தியா பண்ணி முத்து போனை எடுத்தியா என்று கேட்க, முத்து  மீனாவும் வாசலில் பேசிக்கொண்டு இருப்பதை சொல்லுகின்றார்கள். இதனால் வித்யா அப்படி என்றால் என்ன ரொமான்டிக்கா பேசுறாங்க என்று கேட்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றார் ரோகிணி.

Advertisement

Advertisement