• Dec 26 2024

சமந்தாவை மொத்தமாக தூக்கி எரிந்த நாக சைதன்யா..? கடைசி விக்கட்டும் அவுட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளை இவர் பிரபலமாக காணப்படுகின்றார்.

2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் திடீரென என்ன நடந்தது என்று தெரியவில்லை. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து தத்தமது வழிகளில் சென்றார்கள்.

இதைத் தொடர்ந்து சமந்தா தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தினார். அவர் ஒருவித தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். ஆனாலும் அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் வெள்ளித் திரையில் ஜொலித்து வருகின்றார்.

நாக சைதன்யா சமந்தாவை பிரிந்த சிறிது காலத்திலேயே சோபிதா துலிபாலாவுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருடன் அடிக்கடி டேட்டிங் செய்வது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு ட்ரிப்பும் அடித்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் பற்றிய கிசுகிசு தகவல்கள் வெளியான போதும் இருவரும் மௌனம் காத்தார்கள்.


இதை அடுத்து சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும்  பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. புது மருமகளை  வரவேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நாக அர்ஜுனா. கூடிய விரைவில் இவர்களுடைய திருமணமும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாக சைதன்யா தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தாவை மொத்தமாகவே தனது வாழ்க்கையில் இருந்து தூக்கி உள்ளார். அதாவது சோபிதாவுடன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் instaவில் இருந்த சமந்தாவின் கடைசி  புகைப்படத்தையும் டெலிட் செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement