• Oct 28 2024

இடைநிறுத்தப்பட்ட இளையராஜா பயோபிக்! நிறுவனத்தால் ஏற்பட்ட குழப்பம்! தனுஷ் முடிவு...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். நடிகராகமட்டும் அல்லாமல் இயக்குனராகவும் பல படங்களில் பிசியாக இருக்கின்றார் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கிய நடித்த அவரது ஐம்பதாவது படமான ராயன் திரையில் வெளியாகி செம ஹிட்டடித்தது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், தற்போது  இயக்கி முடித்துள்ளார்.


மறுபக்கம் தனுஷ் அடுத்து இட்லி கடை திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் தனுஷ் நடிக்கவிருக்கும் இளையராஜா பயோபிக் படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் இப்படம் எப்போது துவங்கும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.


இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்பட்டாலும் அதற்கான எந்த அறிகுறிகளும் தற்போது வரை தெரியவில்லை.  தயாரிப்பு நிறுவனத்தால் ஏற்பட்ட குழப்பத்தால் இப்படம் கைவிடப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இருப்பினும் தனுஷ் மற்றும் இளையராஜா எப்படியாவது இப்படத்தை துவங்க முயற்சித்து வருகிறார்களாம். எனவே இப்படம் கண்டிப்பாக கைவிடப்படாது என்றும் இணைய வாசிகள் கூறிவருகிறார்கள். 





Advertisement