• Dec 26 2024

20 வயது இளைஞனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட நமீதா.. வைரல் வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும்டான்ஸ் ஜோடி டான்ஸ்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் கலந்து கொண்ட நடிகை நமீதா போட்டியாளராக கலந்து கொண்ட 20 வயது இளைஞர் உடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

ஜீ டிவியில்டான்ஸ் ஜோடி டான்ஸ்என்ற நிகழ்ச்சி கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாவது சீசன் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது. டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் நடிகைகள் சினேகா, சங்கீதா ஆகியோர் நடுவர்களாகவும், ஆர்ஜே விஜய் தொகுப்பாளராகவும் இருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் இரண்டு எபிசோடுகளுக்கு எஸ்ஜே சூர்யா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

இந்த நிலையில்  இந்த நிகழ்ச்சியில் 20 வயதுடைய ஒரு போட்டியாளர் அபாரமாக டான்ஸ் ஆடிய நிலையில்உங்களுடன் இணைந்து நான் டான்ஸ் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று திடீர் என களத்தில் இறங்கிய நமீதாகாதல் வைபோகமேஎன்ற பாடலுக்கு செம ஆட்டம் ஆடினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த போட்டியாளர் நமீதாவுடன் இணைந்து குஷியாக ஆடினார்

 வாங்க மச்சான் ஆடுவோம்என்று நமீதா 20 வயது இளைஞருடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது.



Advertisement

Advertisement