• Dec 26 2024

'நீயா நானா' பிரபலமான இளைஞன் எக்ஸ்பிரஸ் இரயில் மோதி உயிரிழப்பு? நெஞ்சை உலுக்கிய சம்பவம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் நிகழ்ச்சி  என்றால் அது ''நீயா நானா'' நிகழ்ச்சி தான். 

இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கெதிரான இவர், மக்களுக்கு சிறந்த  விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்.

அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 

இவ்வாறு இடம் பெற்ற நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில், இளம் பெண் ஒருவர் தனது அண்ணா விதவிதமாக தோசை சாப்பிடுவார் என்று வெறுப்புடன் கூறி இருந்தார். தனது மகனுக்கு துணையாக அவரது அம்மாவும் பேசிய நிகழ்ச்சி சுவாரசியமாக சென்றது.


மேலும் தனது மகன் 25 தோசைக்கு மேல் சாப்பிடுவான். அதுவும் விதவிதமா தான் சாப்பிடுவான் என கூறியிருந்தார். அந்த பையன் யாருப்பா? எங்க பாக்கணும் என பிரபலமானவர்தான் பிரணவ்.

இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரணவ், ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் கடந்த வார இடம் பெற்றுள்ள நிலையில், 22 வயதான பிரணவ் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது ரயிலில் மோதி உயிரிழந்து உள்ளதோடு,  அவர் போன் பேசிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க சென்றதாகவும், குறித்த விபத்தில் அவர் மட்டுமின்றி அவருடன் சென்ற சதீஷ் என்பவரும் உயிர் இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement