• Dec 26 2024

இனி மொத்தமா முடிச்சுக்கலாம்.... திடீரென தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி எடுத்த விபரீத முடிவு

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிறப்பாக சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா, தனுஷ் திருமண வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட பூகம்பத்தினால் இருவரும் பிரிந்து வாழ்கின்றார்கள். எனினும் அவர்கள் இதுவரையில் விவாகரத்து பெறவில்லை.

3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான  ஐஸ்வர்யாவுக்கு, அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், அந்த படம் பலரையும் கவர்ந்திருந்தது. தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயற்றியிருந்தார். எனினும் அது தோல்வி அடைந்தது. தனது அப்பாவை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். அதுவும் படு தோல்வி.


இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்களாம்.

அதன்படி, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement