• Apr 07 2026

கரூர் சம்பவத்தில் புதிய திருப்பம்; CBI விசாரணையில் அம்பலமான உண்மை.? வசமாக சிக்கிய தளபதி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முக்கிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்றைய தினம், அந்த கூட்டம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என தகவல் பரப்பப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களை கடந்து வந்த நடிகர் விஜய்  அங்கு தாமதமாக தான் வந்தார் . இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் மக்கள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அந்தக் கூட்டத்தில் பாதி பேர் மட்டுமே விஜயை பார்க்க வந்தவர்கள் என்பதும், தவெக தரப்பு திட்டமிட்டு தாமதம் செய்தது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல யூட்யூபரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ், கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான வீடியோ ஃபுட்டேஜ்களை அழிக்க விஜய் முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் விஜய் கட்சி சார்பில் எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகளை முதலில் அழிக்க உத்தரவிட்டதாகவும், சிபிஐ அண்மையில் அதை மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் தரப்பு பல ஆதாரங்களை மீடியாவிற்கு தராமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஜய் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement